சத்துணவில் கெட்டுப்போன முட்டை! நடவடிக்கை எடுக்குமா திமுக அரசு?

பெற்றோர்களும், கிராமத்தினரும் சத்துணவு அமைப்பாளரிடம் கோரிக்கை:

சத்துணவில் வாரத்தில் திங்கள், புதன், வியாழக்கிழமைகளில் குழந்தைகளுக்கு முட்டைகள் வழங்குவது வழக்கம். அந்த வகையில் சேலத்தில் அழுகிப்போன முட்டைகள் சத்துணவில் வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம் வேப்பம் பூண்டி கிராமத்தில் உள்ள ஆரம்ப பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அழுகி போன முட்டைகள் வழங்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட சத்துணவு அமைப்பாளரிடம் சென்று கேட்டபோது, முட்டை குள்ளே சென்றால் நான் பார்க்க முடியும்? தங்களுக்கு வரக்கூடிய முட்டைகளைதான் வழங்கமுடியும் என பொறுப்பில்லாமல் பதிலளித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும், ஆசிரியருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

ஒரு வாரத்திற்கு முன் வந்த சத்துணவு முட்டைகள் கெட்டுப்போன நிலையில், அதனை கவனிக்காமல் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கிய சத்துணவு பொறுப்பாளர்கள் மீது சம்பந்தப்பட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களும், கிராமத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!