கடைகள், ஓட்டல்கள் திறப்பு நேரம் குறைப்பு குறித்து ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை?

கொரோனா கட்டுப்பாடுகள்:

தமிழகத்தில் சில மாவட்டங்களில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் 35 ஆயிரத்திற்கு மேல் உறுதி செய்யப்பட்டு வருவதால்  கடைகள் திறப்பு நேரம் குறைக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி காலை உடன் முடிவடைய உள்ளது. எனவே கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டால் மட்டுமே மூன்றாம் அலையை தவிர்க்க முடியும்.

சென்னையில் கடைகளுக்கு அனுமதி இல்லை:

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளன. கோவை, திருச்சியில் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைக்கு மட்டும் கடைகள் அனுமதி:

  • மருந்தகங்கள்
  • பால்
  • காய்கறிகள்

உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்கான செயல்பாடுகள் தவிர, பிற விற்பனை மையங்கள் அனைத்தும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் கட்டுப்பாடுகள் 

அனைத்து மளிகை, பலசரக்கு கடைகள், காய்கறி கடைகளுக்கு நேர கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படலாம்.

அதேபோல் ஹோட்டல்கள் உள்ளிட்ட பிற கடைகள் செயல்படும் நேரத்திலும் சுமார் 2 மணி நேரம் வரை குறைத்து கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்.