தனியார் பள்ளிகளில் 25% இலவச கட்டணத்தில் மாணவர் சேர்க்கை தொடக்கம்! ஆகஸ்ட் 3 ஆம் தேதி கடைசி நாள்!

RTE மாணவர் சேர்க்கை தொடக்கம்:

கல்வி உரிமை சட்டம்:

தமிழகத்தில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2021-2022-ம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது. தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்

இலவச மாணவர் சேர்க்கை:

இந்நிலையில் ஆண்டுதோறும் ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாவட்டம் தோறும் உள்ள அனைத்து சிறுபான்மையின தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீட்டில் இலவசமாக மாணவர் சேர்க்கை வழங்கப்படும்.

தனியார் பள்ளிகள்:

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை வழங்க ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 3 வரை இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை:

இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் மொத்தம்

179 மெட்ரிக் பள்ளிகள்,

192 நர்சரி பள்ளிகள்,

பிரைமரி பள்ளிகள்

மொத்தமாக 371 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது.

விண்ணப்பித்த இடங்கள்: 

மெட்ரிக் பள்ளிகளில் 2,646 இடங்கள்,

நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் 1905 இடங்கள்

என மொத்தம் 4551 இடங்களுக்கான விண்ணப்ப பதிவு ஆன்லைன் மூலமாக தொடங்கப்பட்டுள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!