தமிழகத்தில் மாநில கல்விக்கொள்கை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!!

அன்பில் மகேஷ் தெரிவிப்பு:

தமிழகத்தில் மாநில கல்விக்கொள்கையை உருவாக்கும் திட்டம் முதல்வர் ஸ்டாலினுக்கு உள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அதற்கான திட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

மாநில கல்விக்கொள்கை:

10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று திருச்சியில் பள்ளி ஒன்றில் பேசிய அவர் தமிழகத்தில் மாநில கல்விக்கொள்கையை உருவாக்கும் திட்டம் முதல்வர் ஸ்டாலினுக்கு உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். இது குறித்து முதன்மை செயலாளருடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மேலும் மாநில கல்விக் கொள்கையை வடிவமைப்பதற்கான குழுவில் யார் இடம் பெற வேண்டும் என்பதற்கான பட்டியல் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே திருச்சியில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தேசிய கல்விக் கொள்கையின் சிறப்பம்சம் குறித்து தமிழக ஆளுநர் பேசி இருந்த நிலையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் புதிய தகவலை தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் இந்தியாவில் உள்ள தலை சிறந்த கல்வி நிறுவனங்களில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்து படிக்க வேண்டும். அதற்காக மாணவர்களை ஊக்கப்படுத்த, மாதிரி வகுப்புகள் நடத்தப்படுகிறது. மேலும் மாணவர்கள் பயணத்திலும் கவனம் செலுத்த வேண்டும். ஆபத்தான பயணங்களை மேற்கொள்ள கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!