M.Ed படிப்புக்கான மாணவர் சேர்க்கை 2021 – விண்ணப்பங்கள் வரவேற்பு!!

கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் M.Ed படிப்புக்கு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

M.Ed படிப்பு:

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 6 கல்லூரிகளில் M.Ed பட்டப்படிப்பு நடத்தப்படுகிறது எனவும் M.Ed படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.tngasaedu.in  மற்றும் www.tngasaedu.org  எனும் இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்யலாம்.

இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் அருகில் உள்ள கல்வியியல் கல்லூரியின் உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை பதிவு செய்ய விண்ணப்பக் கட்டணமாக ரூ.60 செலுத்த வேண்டும் என்றும் SC/ST பிரிவினர் பதிவு கட்டணமாக ரூ.2 செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் விவரங்களை அறிய 044-28260098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!