மாணவர்கள் உற்சாகம்!! தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு!!

பள்ளிக்கு செல்ல மாணவர்கள் உற்சாகம்:

இன்று அதிகாலை முதலே சாலைகளில் உற்சாக சிரிப்புடன் மாணவ, மாணவிகளைக் காண முடிந்தது. ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது நண்பர்களைப் பார்க்கும் ஆவலுடன் மாணவர்கள் தங்களது பள்ளிக்கு புறப்பட தயாராகினர்.

முக்கியமாக பின்பற்ற பட வேண்டிய வழிகாட்டு விதிமுறைகள்:

  • மாணவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் உணவு, புத்தகங்கள், பென்சில் போன்ற பொருட்களை பகிர்ந்து கொள்ள அனுமதி கிடையாது.
  • உணவு இடைவேளையின் போது மாணவர்கள் திறந்த வெளியில் மட்டுமே சாப்பிட அனுமதி.
  • மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இருக்கைள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
  • பள்ளிக்கு வர பெற்றோர்களின் ஒப்புதல் கட்டாயம்.
  • குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப விரும்பாவில்லை எனில் ஆன்லைன் மூலமே பாடங்களை கவனித்துக் கொள்ளும் வசதியும் உண்டு.
  • கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் ஸ்டாஃப்கள், மாணவர்களுக்கு அனுமதி கிடையாது.
  • பள்ளி வளாகத்திற்குள் தனிமைப்படுத்தப்படும் அறை அமைக்கப்பட வேண்டும்.
  • பள்ளியில் உள்ள கழிப்பறையில் சோப், தண்ணீர் கட்டாயமாக இருக்க வேண்டும்.

அதே போல் சானிடைசர், உடல் வெப்பநிலை பரிசோதிக்கும் கருவி, மாஸ்க் போன்றவையும் வைக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!