மருத்துவ கல்லூரிகளில் சேர மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில் சேருவதற்காக, இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

எம்.பி.பி.எஸ், மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானதை அடுத்து, பிற மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியானதால், மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள், இன்று காலை 10 மணி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்தார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!