மாணவர்களுக்கு நவ.5 முதல் பள்ளியிலேயே தடுப்பூசி போட உத்தரவு!!

நவம்பர் 5ம் தேதி முதல் பள்ளி வளாகங்களிலேயே 5 முதல் 6 வயது வரை உள்ள மாணவர்களுக்கு டிபிடி எனப்படும் தொண்டை அடைப்பான் (டிப்தீரியா), கக்குவான் இருமல் (பெர்ட்டூசிஸ்), ரணஜன்னி (டெட்டன்ஸ்) தடுப்பூசியை வழங்க வேண்டும். 10 வயதான மாணவர்களுக்கு ரணஜன்னி தடுப்பூசி வழங்க வேண்டும்.

அந்த வகையில் வரும் நவம்பர் 5ஆம் தேதி பள்ளி வளாகங்களில் மாணவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நடவடிக்கையை டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக பள்ளிகளில் இருந்து இடை நின்ற மாணவர்கள் தடுப்பூசி செலுத்துவது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!