தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டை தாரர்களுக்கு சூப்பர் செய்தி..

தீபாவளி பண்டிகையை  முன்னிட்டு நியாயவிலை கடைகளில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை திறந்து வைக்கவும், அட்டை தாரர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்ட அறிவுரையின்படி சிறப்பு அத்தியாவசிய  பொருட்கள் நவம்பர் மாதத்திற்கான அதிகபட்சமான முன் நகர்வினை  முழுமையாக முடிக்கப்பட வேண்டும்

நாடு முழுவதும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குபவர்கள் பயன்பெறும் வகையில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அரிசி பெற்று வரும் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களும் இலவச அரிசி மற்றும் பொது விநியோகத் திட்டத்தில், தற்போது மானிய விலையில் பெற்று வரும் அனைத்துப் பொருட்களையும் தொடர்ந்து பெற்று பொது விநியோகத் திட்டத்தின் பலன்களை அடையலாம் என, தெளிவுபடுத்தியுள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!