தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு தேதிகள் – வெளியீடு!

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 15, 16 , 23, 24  ஆகிய தேதிகளில் ஆன்லைன் வழியாக நடத்தப்பட உள்ளது. தேர்வுகளை எழுத விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களையும், செப்டம்பர் 2 ஆம் தேதிக்குள் நுழைவுத் தேர்வுக்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

இணையதளத்தில் தெரிவித்த  மாநிலங்கள்:

தமிழ்நாடு, பிஹார், ராஜஸ்தான், கர்நாடகா, ஜார்கண்ட், ஜம்மு, ஹரியானா, குஜராத், ஆந்திரபிரதேசம், அசாம், பஞ்சாப், கேரளா ஆகிய 12 மாநிலங்களை ஒருங்கிணைத்து,

ஆன்லைன் நுழைவுத்தேர்வு:

மாணவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரி அறிவியல், பொருளாதாரம் போன்ற பாடங்களுக்கான ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப் படிப்புகளுக்கும், பிஎஸ்சி, பி.எட் போன்ற இளநிலை பட்டப் படிப்புகளுக்கும்  நுழைவுத் தேர்வுகள் ஆன்லைன் வழியாக மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் மத்திய பல்கலைக்கழகத்தின் http://cucet.nta.nic.in என்ற இணையதள முகவரியின் கீழ் வரவேற்கப்பட்டுள்ளன’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!