தமிழக அரசு அறிவிப்பு! இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கான புதிய தகவல்!

பள்ளிக்கல்வித்துறை:

தமிழக அரசு தொலைக்காட்சிகள் மூலம் கல்வி சேனலை அமைத்து மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்திருந்தது. இருப்பினும், மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல முடியாததால் கற்றல் திறன் வெகுவாக குறைய தொடங்கியது. இந்த நிலையில் தனியார் பள்ளிகள் நடத்தி வந்த ஆன்லைன் வகுப்புகள் குறித்து சில எதிர்ப்புகளும் வர தொடங்கியது

இந்த நிலையில், தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்திருந்தது. மேலும், மேலாண்மை குழு கூட்டத்திற்கான வழிமுறைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாணவர்களுக்கு வீடுகள் தேடி சென்று கல்வி கற்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தது. இதற்கு பல தரப்பு மக்களிடம் இருந்த வரவேற்புகள் வந்தன. இதனால் மாணவர்கள் கொரோனா காலத்தில் மிக பாதுகாப்பாக கல்வி கற்க உதவியாக இருந்தது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தேர்வு செய்யப்படும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களின் பதவி காலம் 2 ஆண்டுகளாகும். மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு குழுவில் உறுப்பினராக இல்லாத இல்லம் தேடி கல்வி திட்டத்தின் தன்னார்வலர்கள் 3 பேரை சுழற்சி முறையில் அனுமதிக்க வேண்டும் என்று பள்ளி இயக்குனரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!