1-5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிற்றுண்டி திட்டம் தமிழக அரசு அறிவிப்பு!

காலை உணவு:

சென்னை : தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்தான சிற்றுண்டி வழங்குவதற்கான பணிகளை தமிழக அரசு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று செயல்படுத்தப்பட உள்ளது.

1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதன்படி .அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்ட பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் முதற்கட்டமாக பணிகள் தொடங்கப்படவுள்ளது காலை 5:30-7:45 மணிக்குள் சமையல் பணியை முடிக்கவும், காலை 8:15-8:45 மணிக்குள் உணவை குழந்தைகளுக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சிற்றுண்டி மகளிர் சுய உதவிக்குழுவினால் சமைத்து வழங்கப்படும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.பணிகள் தொடங்கப்படவுள்ள நிலையில் விரைவில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைப்பார் என கூறப்படுகிறது.

முதல் கட்டமாக இத்திட்டம் மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

விதிமுறைகள்:

  • அதில் காலை உணவு திட்டத்தை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் சுழற்சி முறையில் மேற்பார்வையிட வேண்டும்.
  • தரமான மற்றும் சுகாதாரமான உணவை போதுமான அளவுக்கு மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
  • காலை உணவு திட்டத்தில் அரசால் பரிந்துரைக்கப்பட்ட உணவு பட்டியலின் படி உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
  • பள்ளி ஆசிரியர்களும், மேலாண்மை குழு உறுப்பினர்களும் சுழற்சி முறையில் உணவை சுவைத்து, தரத்தை அறிய வேண்டும்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!