தமிழக அரசு ரேஷன் அரிசியை விற்பனை செய்வோர்க்கு பொருட்கள் வழங்குவது நிறுத்தம்!!

தமிழக அரசு விளக்கம்:

தமிழகத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ரேஷன் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் அரிசி, எண்ணெய், பருப்பு போன்ற பொருட்களை விற்பது தெரிந்தால் அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படும் என உயர்நீதிமன்ற விசாரணையின் போது தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

 ரேஷன் பொருட்கள்:

‘ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஆதார் இணைப்புடன் கூடிய கைரேகை பதிவின் மூலம் தான் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த பொருட்கள் மக்களின் கைகளுக்கு செல்லும் முன்னரே அவற்றை கடத்துவது, மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வது உள்ளிட்ட சில சட்டவிரோத செயல்கள் இன்றும் ஏற்பட்டு வருகிறது. இவற்றை தடுக்க தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழக அரசு மக்களுக்கு இது தொடர்பான ஒரு விளக்கம்: 

இந்நிலையில் ரேஷன் அரிசியை கடத்தியது தொடர்பான வழக்கில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து தனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக விளக்கம் கொடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!