மக்களே…! ரேஷன் கடைகளில் சிலிண்டர் ரூ.250, ரூ.575 க்கு விற்பனை!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில்  கேஸ் சிலிண்டர்கள் விற்பனை இன்று முதல் தொடங்குவதாக   கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி அறிவித்திருந்தார். ரேஷன் கடைகளில் குறைந்த எடை கொண்ட கேஸ் சிலிண்டர்களின் விற்பனை இன்று  தொடங்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதாவது சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள டியூசிஎஸ் எனப்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் காமதேனு பால் பொருள் அங்காடியில் இந்த விற்பனை தொடங்கப்பட உள்ளது.அதன் பிறகு தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் ரேஷன் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் சிலிண்டர் விற்பனை செய்யும் திட்டம் விரிவாக்கப்படும்.

இரண்டு மற்றும் ஐந்து கிலோ இடையில் சிலிண்டர்களை விற்பனை செய்வதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். சென்னையில் முதன்முறையாக இரண்டு கிலோ சமையல் கேஸ் சிலிண்டரை பெறுவதற்கு 958 ரூபாயும்,ஐந்து கிலோ காஸ் சிலிண்டரை பெறுவதற்கு 1515 ரூபாயும் நுகர்வோர் செலுத்த வேண்டும். அதற்குப் பின்னர் கேஸ் சிலிண்டர் தீர்ந்து விட்டால் அதற்கான தொகையை மட்டும் கொடுத்து சிலிண்டரை வாடிக்கையாளர்கள் நிரப்பி கொள்ளலாம். அதாவது சென்னையில் இந்த மாதம் இரண்டு கிலோ சமையல் எரிவாயு 250 ரூபாய்க்கும் ஐந்து கிலோ 575 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதன் படி ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும், 2 கிலோ கேஸ் சிலிண்டருக்கு ‘முன்னா’ எனவும், 5 கிலோ கேஸ் சிலிண்டருக்கு ‘சோட்டு’ எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த சிலிண்டர்களை இன்று (அக். 6) கூட்டுறவுத் துறை அமைச்சர் அறிமுகப்படுத்தினார்.