தமிழகத்தில் இன்று முதல் இ-பதிவு முறை அமல்!!

தமிழகத்தில் இன்று முதல் இ-பதிவு முறை:

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. காலை 10 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும். புதிதாக இ-பதிவு முறை அமலுக்கு வருகிறது.

இ-பதிவு முறை:
* வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பதிவு முறை கட்டாயமாக்கப்படும்.
* அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை போன்றவற்றிற்கு மாவட்டங்களுக்குள்ளும் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயும் பயணம் மேற்கொள்ள இ-பதிவுமுறை கட்டாயமாக்கப்படும். இ-பதிவு முறை 17-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும். (https://eregister.tnega.org)
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள்உச்சம் அடைந்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.