காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்!! 1.20 இலட்சம் போலீசார் பாதுகாப்பு!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி  நடைபெற்றது. இதன் முடிவுகள் மே 2 ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் வாக்கு எண்ணிக்கை  நாளை காலை 8 மணிக்கு  தொடங்கப்படும் எனவும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி முகவர்கள் முகக்கவசம் அணிந்து கிருமிநாசினி பயன்படுத்திய பின் அறைக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்  என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்களிப்பு எண்ணிக்கை: 

தமிழகத்தில் 4.57 கோடி பேர் வாக்களித்து உள்ளனர் எனவும் 88,937 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் முகவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

உள்ளே அனுமதிக்காத பொருட்கள்:
  • கைப்பேசி
  • பேனா
  • தின்பண்டங்கள் 
மையங்களின்  பாதுகாப்பிற்க்காக:

வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வெளியே இராணுவத்தினரும், உள்ளூர் காவல் அதிகாரிகளும் நியமிக்கப்படுவதன் மூலம் 1.20 இலட்சம் போலீசார் பாதுகாப்பில் இருப்பார்கள் என தெரிவித்தார். பிறகு வெற்றி சான்றிதழ் பெறும் போது இரண்டு நபர்கள் மட்டும் அனுமதிப்பார்கள் என அறிவிப்பு.

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!