தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வு ரத்து!!!

தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டது !!!

தமிழகத்தில் கல்லுரிகளில் நடப்பு ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்வதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று  நாளுக்கு நாள் அதிகமாகும் காரணத்தால் பல்வேறு கல்லூரிகள் கொரோனாக்கு சிகிச்சை அளிக்கப்படும் மையமாக மாற்றப்பட்டது. அதனால் இந்த பருவத்திற்கான அனைத்து செமஸ்டர் தேர்வுகளில் இருந்தும் மாணவர்களுக்கு விலக்கு அளித்து அடுத்த கல்வியாண்டிற்குச் செல்ல அனுமதி அளித்து முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.

  • தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு நடப்பு செமஸ்டர் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • பொறியியல் இளங்கலையில் முதல் 3 வருட மாணவர்களுக்கு இந்த பருவத்திற்கு உரிய செமஸ்டர் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை.
  • முதுகலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் செமஸ்டர் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.