ஆசிரியர் பட்டயப் படிப்பு:
புதுச்சேரி-மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் இரண்டு ஆண்டு பட்டயப் படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என பயிற்சி நிறுவன முதல்வர் தெரிவித்துள்ளார்.
கல்வி பயிற்சி நிறுவனம்:
புதுச்சேரி மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில், 2021-22ம் கல்வி ஆண்டில், இரண்டு ஆண்டு ஆசிரியர் பட்டயப் படிப்பு சேர்க்கைக்கு, புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம்.
இதில் சேர்வதற்கு மேல்நிலைப் பள்ளி தேர்வு அல்லது அதற்கு சமமான தேர்வில், குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
அட்டவணை இனத்தவர், எம்.பி.சி., மற்றும் பி.சி., பிரிவினர் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் https://schooledn.py.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் அல்லது லாஸ்பேட்டையில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் இருந்தும் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்.
ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் தெரிவிப்பு:
மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை வரும் 31ம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் தெரிவித்துள்ளார்.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்த கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!