தேர்வு வாரியம் அறிக்கை:
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக இருக்கும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கை வெளிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த அறிக்கை தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் முதுகலை, இடைநிலை, பட்டதாரி உள்ளிட்ட ஆசிரியர்களும், இதே போன்று கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், வட்டார கல்வி அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
4136 உதவிப்பேராசியர் பணியிடங்கள்:
இந்த நிலையில், தமிழகத்தில் கல்லூரிக் கல்வியியல் சேவையில் உள்ள அரசு/அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக இருக்கும் 4136 உதவிப்பேராசியர் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்ற 46 பக்கம் கொண்ட அறிக்கையானது சமூக வலைதலங்களில் காட்டுத்தீ போன்று பரவி கொண்டிருக்கிறது.