10ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாவது அலகு தேர்வு தேதி மாற்ற ஆசிரியர்கள் கோரிக்கை!!

முதன்மை கல்வி அதிகாரிகள் தெரிவிப்பு:

தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாவது அலகு தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அலகு தேர்வு:

பள்ளிகளை திறந்ததும், 45 நாட்கள் வரை ஒருங்கிணைப்பு மற்றும் உளவியல் பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும், அவ்வப்போது பாடங்கள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்ட நிலையில் ஆசிரியர்கள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களை மட்டும் நடத்தி வந்தனர் ஆனால் தற்போது இரண்டாம் அலகு தேர்வு நடத்தும், பள்ளிகளுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.

ஆசிரியர்கள் கோரிக்கை:

அதில் கூறப்பட்டதாவது, வரும், 18 தேதி முதல்  10ம் வகுப்பு மாணவர்களுக்கு, இரண்டாம் அலகு தேர்வு நடத்த வேண்டும். அதற்கு பொது வினாத்தாள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளிகளை திறந்து 45 நாட்கள் புத்துணர்வு பயிற்சி அளிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறி இருந்தனர். பள்ளிகளை திறந்து, 45 நாட்கள் கூட ஆகாத நிலையில், நடத்தாத பாடங்களுக்கும் சேர்த்து தேர்வு நடத்த சொல்வதால் குழப்பமடைந்த ஆசிரியர்கள் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்    இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!