தமிழகத்தில் சத்துணவு திட்டத்தில் ரொட்டி வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்?

சத்துணவு திட்டம்:

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு சத்துணவு வழங்குவதை உறுதி செய்ய அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 50 லட்சம் மாணவ, மாணவியருக்கு தடையின்றி சத்துணவு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ரொட்டி, முட்டை வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள மாணவர்களை கண்டறிந்து கல்வியை தொடர வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டு காலமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. அதனால் வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது.  அதனை தொடர்ந்து தமிழகத்தில் தொற்று பரவல் சற்று குறைந்து வருவதால் மீண்டும் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரை செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன்  இணைந்திருங்கள்