நாடு முழுவதும் ஒரே மாதிரியான சர்வதேச ஓட்டுநர் உரிமம் அறிவிக்கையை வெளியிட்ட மத்திய அரசு!

ஓட்டுநர் உரிமம்:

இன்றைய உலகில் தற்போது போக்குவரத்து சேவை என்பது தவிர்க்க முடியாத ஒரு தேவையாக மாறிவிட்டது. மேலும் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப போக்குவரத்து வசதிகள் அதிகமாக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வருவதால் போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நெரிசல்கள் அதிகரித்து காணப்படுகிறது.

நாடு முழுவதும் சர்வதேச ஓட்டுனர் உரிமம் அளிப்பதில் குடிமக்களுக்கு சிறந்த வசதிகளை ஏற்படுத்துவதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தற்போது, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அளிக்கப்படும் சர்வதேச ஓட்டுநர் உரிமங்களின் வடிவம், அளவு, முறை, வண்ணம் ஆகியவற்றில் வேறுபாடுகள் இருந்து வருகிறது.

இதன் காரணமாக, வெளிநாடுகளில் இந்த சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்தும் குடிமக்கள், சிரமங்களை சந்தித்து வந்தனர். இந்த நிலையில், இந்த திருத்தத்தின் காரணமாக, ஜெனிவா ஒப்பந்தத்தின்படி, நாடு முழுவதும் ஒரே மாதிரியான சர்வதேச ஓட்டுநர் உரிமம் அளிக்கப்படுகிறது.

ஓட்டுநர் உரிமத்துடன், சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை இணைப்பதற்கு க்யுஆர் கோடு விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உதவி எண்களும், மின்னஞ்சல் முகவரிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!