அண்ணா பல்கலை இறுதியாண்டு மாணவர்களுக்கு நாளை முதல் நேரடி வகுப்புகள் தொடக்கம்!!

கல்லூரிகள் திறப்பு:

அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கல்லுாரிகளில், இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும்,நாளை முதல் வகுப்புகள் துவங்குகின்றன. மற்ற மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை தொடர உத்தரவிடப்பட்டு உள்ளது.

சமூக இடைவெளி:

சென்னையில் உள்ள அண்ணா பல்கலை வளாகம் மற்றும் கோவை, திருச்சி உள்ளிட்ட பிற இடங்களிலுள்ள அண்ணா பல்கலை வளாக கல்லுாரிகளிலும், விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன.

மாணவர்களை சமூக இடைவெளி பின்பற்றி அமர வைக்க வேண்டும் என்பதால், முதல் கட்டமாக இறுதியாண்டு மாணவர்களை மட்டும் வர வைத்துள்ளோம்.

நேரடி வகுப்புகள் நடந்தாலும், ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடக்கும். வெளியூர் மாணவர்கள் அவற்றில் பங்கேற்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்த கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!