பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச், ஏப்ரலில் நடைபெறாது என தகவல்!!

பொதுத் தேர்வுகளுக்கான தகவல்கள்:

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு பதிலாக மே மாதம் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்பட வில்லை. கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி 9 முதல் 12 ம் வகுப்புகளுக்கும், அடுத்தகட்டமாக நவம்பர் 1-ம் தேதி முதல் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலும் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

இருப்பினும். வடகிழக்கு பருவமழை காரணமாக பள்ளிகளுக்கு அடுத்தடுத்து விடுமுறை அறிவிக்கப்பட்டு தொடர்சியாக வகுப்புகளை நடத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் முழுமையாக கல்வி கற்க இயலாத சூழல் உள்ளது.

இதனால், நடப்பு கல்வியாண்டில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு வழக்கமான மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்திடாமல், மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வசதியாக மே மாதத்தில் பொதுத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!