பொது இடங்களில் தடுப்பூசி போடாதவர்களுக்கு அனுமதி இல்லை!

மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு:

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதி இல்லை என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து அரசு பூங்காக்களின் இயக்குநர் கூறிய விபரங்கள் இப்பதிவில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி:

தடுப்பூசி போடாதவர்களுக்கு பேருந்துகள், நூலகங்கள், உடற்பயிற்சி கூடம், விளையாட்டு வளாகங்கள், நீச்சல் குளங்கள், கன்காரியா ஏரி முகப்பு, ஆற்றங்கரை உள்ளிட்ட இடங்களில் அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்றுக்கு எதிரான ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. தடுப்பூசி போடாதவர்கள் பூங்காக்கள் மற்றும் தோட்டங்களுக்குள் நுழைய தடை விதிக்கப்படும்.

முக்கிய குறிப்பு:

முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டு 2வது தவணைக்காக காத்திருந்தாலும் அவர்கள் போக்குவரத்து சேவை மற்றும் கட்டிடங்களில் நுழைய அனுமதி இல்லை என குஜராத் அரசு பூங்காக்களின் இயக்குநர் ஜிக்னேஷ் படேல் கூறியுள்ளார்.