தடுப்பூசி போடாதவர்கள் இன்று முதல் பேருந்தில் பயணிக்க தடை!!

கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் போடாதவர்கள் இன்று முதல் பேருந்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்தும்விதமாக மாநில அரசுகள் தடுப்பூசி போடுவதில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் 34 லட்சம் பேருக்கு முதல் ‘டோஸ்’, 27 லட்சம் பேருக்கு 2ஆவது ‘டோஸ்’ தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஆனால் தவணை தேதி கடந்தும் இன்னும் 6.68 லட்சம் பேர் 2ஆவது ‘டோஸ்’ செலுத்திக்கொள்ளவில்லை. இந்நிலையில், 2ஆவது ‘டோஸ்’ தடுப்பூசி போடாதவர்கள் இன்று முதல் மாநகர பேருந்துகளில் பயணிக்க முடியாது, பூங்கா, மிருகக்காட்சி சாலை உள்ளிட்ட பொது இடங்களில் நுழைய முடியாது என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளார்.

மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியா்கள் ஒரு தவணை தடுப்பூசிகூட செலுத்திக்கொள்ளவில்லை எனில் அவா்களுக்கு ஊதியம் நிறுத்தி வைக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் சில தினங்களுக்கு முன் அறிவித்தது. இந்நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களுக்கு பேருந்தில் அனுமதி கிடையாது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!