தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு? வெளியான தகவல்!

தீபாவளி பண்டிகை:

தமிழகத்தில் கொரோனா கால கட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதில் குறிப்பாக பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவார்கள் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதிலும் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதற்கு நேர கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இது தொடர்பாக சென்ற வருடம், தமிழகம் முழுவதும் காலை 6 மணி முதல் 7 மணி வரை வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டது.

இதனை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அத்துடன் சீன பட்டாசு விற்பனைக்கு தடை செய்யப்பட்டு, பசுமைப் பட்டாசுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் தீபாவளி அன்று ஏற்படும் காற்று மாசுபாடும் வெகுவாக குறைந்தது. அதனால் இந்த வருடமும் தீபாவளிக்கு நேரக்கட்டுப்பாடு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த வருடம் தீபாவளி பண்டிகையானது 24ம் தேதி அன்று கொண்டாடப்பட உள்ளது.

அதனால் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடு குறித்து வருகிற 28ம் தேதி அன்று அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற இருக்கிறது. இதில் வருவாய்த்துறை, தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள், அதிகாரிகள் உட்பட சிவகாசி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 6 பட்டாசு விற்பனை சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த ஆலோசனையின் முடிவில் தீபாவளி அன்று நேர கட்டுப்பாடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.