திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் புதிய வேலை அறிவிப்பு! 50 காலிப்பணியிடங்கள்!

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள தன்னார்வ தொண்டர்கள் (Volunteers) பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 08.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். பின்னர் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் 16 நபர்களும், தென்காசி வட்டச் சட்டப்பணிகள் குழுவில் 06 நபர்களும், அம்பாசமுத்திரம் வட்ட சட்டப்பணிகள் குழுவில் 04 நபர்களும்,சங்கரன்கோவில் வட்ட சட்டப்பணிகள் குழுவில் 04 நபர்களும்,வள்ளியூர் வட்ட சட்டப்பணிகள் குழுவில் 04 நபர்களும், நான்குநேரி வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் 04 நபர்களும், செங்கோட்டை வட்ட சட்டப்பணிகள் குழுவில் 03 நபர்களும், சேரன்மகாதேவி வட்ட சட்டப்பணிகள் குழுவில் 03 நபர்களும், சிவகிரி வட்ட சட்டப்பணிகள் குழுவில் 03 நபர்களும் மற்றும் ஆலங்குளம் வட்ட சட்டப்பணிகள் குழுவில் 03 நபர்களும் தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர்.

இதர தகுதிகள்:

சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் இரக்கம் ஏனையவரின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் தன்மை  கலப்படமற்ற துய்மை ஆகிய அடிப்படை மனித குணங்களின் மீதி ஒன்றி இருத்தல் இச்சமூகத்தினரின் பலவீனமானப்பிரிவினரின் வறியவர்கள் ஆகியோரை புரிந்து கொள்ளும் திறன் இருத்தல் வேண்டும்.

வயது வரம்பு:

இந்த பணிக்கு 18 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

சம்பளம்: 

தன்னார்வ தொண்டர்கள் பணிக்கு வேலை பணிபுரியும் முழு நாள் ஒன்றுக்கு ரூபாய் ரூ.500/- மதிப்பூதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 08.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். பின்னர் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.

அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:

திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பாளையங்கோட்டை, திருநெல்வேலி – 627002

நேர்காணல் விவரம்:

நேர்காணல் தேதி மற்றும் இடம் மார்ச் 10ம் தேதிக்கு முன் விண்ணப்பதாரருக்கு அழைப்பு மூலமாகவோ அல்லது SMS மூலமாகவோ தெரிவிக்கப்படும்.

முக்கிய தேதி: 

கடைசி தேதி: 08.03.2021

பணியிடங்கள்: 

தென்காசி, அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், வள்ளியூர், செங்கோட்டை, நாங்குநேரி, சேரன்மகாதேவி, சிவகிரி, ஆலங்குளம்.

Important  Links: 

Notification PDF and Application Form: Click here

Leave a comment