திருப்பதி கோவில் ரூ.300 கட்டண முன்பதிவு டிக்கெட் இன்று காலை வெளியீடு!!

தேவஸ்தானம் அறிவிப்பு: 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மாத பக்தர்களுக்காக தரிசனம் டிக்கெட் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியிட இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று (ஆகஸ்ட் 24) இணையத்தில் வெளியிடப்படுகிறது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி கோவில்:

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. முதற்கட்ட நடவடிக்கையாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான வழிபாட்டு தலங்கள், முக்கிய விழாக்கள் ரத்து செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது.

திருப்பதி தேவஸ்தானம் கோவில்:

இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் ஆண்டுதோறும் லட்சணக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவது வழக்கம். முன்னதாக கூட்ட நெரிசலை தடுக்க குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இலவச டிக்கெட் மற்றும் ரூ.300 கட்டண டிக்கெட் வழங்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் கொரோனா பாதிப்பு காரணமாக இலவச டிக்கெட் ரத்து செய்யப்பட்டது.

பக்தர்களுக்கு டிக்கெட் இன்று காலை வெளியீடு!!

ரூ.300 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. அதன் படி செப்டம்பர் மாதத்திற்கான முன்பதிவு செய்ய பக்தர்களுக்கு ஆகஸ்ட் 20 ஆம் தேதி டிக்கெட்டுகள் வெளியிட இருந்தன. ஆனால் சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக அப்போது வெளியிடப்படவில்லை. இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில் ரூ.300 கட்டண முன்பதிவு டிக்கெட்டுகள் வெளியிட உள்ளதாக தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!