தமிழக வருவாய் துறையில் கிராம உதவியாளர் வேலை! 145 காலிப்பணியிடங்கள்!

தமிழக வருவாய் துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 5-ம் வகுப்பு படித்திருந்தால் போதும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 17.02.2021 தேதிற்குள் திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பதாரர்கள்  நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ தங்களது படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

  1. கிராம உதவியாளர் பணிக்கு 145 காலிப்பணியிடங்கள் உள்ளன.

2. கிராம வாரியாக பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

  1. கிராம உதவியாளர் பணிக்கு 5-ம் வகுப்பு படித்திருந்தால் போதும். 

2. மனுதாரர் விண்ணப்பிக்கும் கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் மற்றும் மிதிவண்டி ஓட்டுபவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01.07.2020 அன்று மனுதாரர் 21 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

சம்பளம்: 

கிராம உதவியாளர் பணிக்கு மாதம் Rs.11,100/- முதல் Rs.35,100/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 17.02.2021 தேதிற்குள் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பதாரர்கள்  நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ தங்களது படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்தெடுக்கும் முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.

பணியிடம்:

திருவள்ளூர்

Important  Links: 

Notification PDF: Click here