திருவண்ணாமலையில் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்!

திருவண்ணாமலையில் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் வரும் 15.04.2020 முதல் 25.04.2020 வரை நடைபெறவுள்ளது. இதற்க்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் கலந்துகொள்ளலாம்.

வயது வரம்பு:

17 அரை வயது மூத்த 23 வயது வரை தகுதியுள்ள இளைஞர்கள் கலந்துகொள்ளலாம்.

பணியின் பெயர்கள்: 

 1. சிப்பாய் தொழில்நுட்பம்
 2. சிப்பாய் நர்சிங் உதவியாளர்
 3. சிப்பாய் நர்சிங் உதவியாளர் கால்நடை
 4. சிப்பாய் எழுத்தர்
 5. ஸ்டோர் கீப்பர் தொழில்நுட்பம்
 6. சிப்பாய் பொதுப்பணி
 7. சிப்பாய் வர்த்தகர்

விண்ணப்பிக்கும் முறை:

இராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலமாக மட்டும் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

ஆட்சேர்ப்பு முகாமிற்கு எப்படி வருவது

முதலில் ஆன்லைன் மூலம் அப்ளை செய்திருக்க வேண்டும். இராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் கலந்துகொள்ள ஆன்லைனில் விண்ணபிக்காதவர்களுக்கு அனுமதி இல்லை. இராணுவ அள்சேர்ப்பு முகாமில் கலந்துகொள்ள விண்ணப்பதாரர்களுக்கு அனுமதி அட்டை (Admit card) www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் 31.03.2020-க்கு பின்னர் வழங்கப்படும்.

தேவையான சான்றிதழ்கள்

 1. 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
 2. 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
 3. பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ்
 4. குடியுரிமை
 5. சாதி சான்றிதழ்
 6. பிறப்பு சான்றிதழ்

மேற்கண்டவற்றை அசல் மற்றும் நகலுடன் முகாம் நடைபெறும் நாள் அன்று கொண்டுவரவேண்டும்

தேர்வு முறை

 • உடல் தகுதி தேர்வு
 • பொது நுழைவு தேர்வு

முக்கிய தேதிகள்:

விண்ணப்பம் ஆரம்ப தேதி: 01.03.2020

விண்ணபிக்க கடைசி தேதி: 31.03.2020

அனுமதி அட்டை கிடைக்கும் நாள்: 31.03.2020 க்கு பிறகு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: கிளிக் செய்க