கடந்த மார்ச் மாதம் 11 மற்றும் 12 ஆம் வகுபிற்கான தேர்வு நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிவுள்ளது.
மார்ச் மாதம் நடைபெற்ற 11, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும். தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வரும் சமயத்தில் கைபேசி வாயிலாக குறுஞ்செய்தி மூலம் முடிவுகள் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. 11ம் வகுப்பு மறு தேர்வு முடிவுகளும் இன்றே அறிந்து கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை மாணவர்கள், dge.tn.gov.in, tnresults.nic.in, http://www.results.nic.in/ என்ற இணையதளங்களில் பார்க்க முடியும்.