TNEA படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!!

பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல்  தற்போது இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு விண்ணப்பித்த மாணவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் உள்நுழைந்து விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

TNEA தரவரிசை பட்டியல்:

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்திய ஒரு லட்சத்து நாற்பதாயிரம் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி www.tneaonline.org என்கிற இணையதளத்தில் மாணவர்கள் தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தங்களுடைய கட்டாப் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வருகிற செப்டம்பர் 15 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறும். தமிழகம் முழுவதும் மொத்தம் 440 பொறியியல் கல்லூரிகளில் 1,51,870 இடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!