வேளாண் அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி!!!

TNPSC தேர்வுகள் இணையதளத்தில் வெளியீடு:

TNPSC  வேளாண் அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நடந்த தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் இணையத்தில் சென்று பார்க்கலாம்.

தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் சான்றிதழ்களை செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 7ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.

அதே சமயம் குரூப் 2, குரூப் 4 ஆகிய தேர்வுகளுக்கு அறிவிப்புகள் வெளியாகவில்லை. 2021 தேர்வுகால அட்டவணையில் இடம்பெற்றுள்ள தேர்வுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடத்தப்படும் என்றும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத் தாள் கட்டாயமாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC தேர்வு:

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணை ஆண்டுதோறும் வெளியிடப்படும். இதில் நடப்பாண்டு 42 தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 38 தேர்வுகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!