பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு:
தமிழகத்தில் ஆசிரியர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு:
- ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- மேலும் ஆசிரியர்கள், பிற பணியாளர்கள் என அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- செப்.1 முதல் பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு உள்ளன.
- மேலும் கல்லூரிகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பேராசிரியர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- செப்.1 முதல் கல்லூரிகளில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட உள்ளன.
- உடல் நல சூழலால் சில ஆசிரியர்களால் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நிலை உள்ளது.
- அரசு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள் அதற்கான உரிய மருத்துவ சான்றிதழ் உடன் பள்ளிக்கு நேரில் வருகை புரிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- செப்டம்பர் 5ம் தேதிக்குள் ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தடுப்பூசி செலுத்தி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்த கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!