மீண்டும் ரேஷன் கடைகளில் டோக்கன் முறையில் வழங்கும் திட்டம்!!

தமிழக அரசு அறிவிப்பு:

கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு ரேஷன் கடைகளில் பின்பற்றப்பட்ட டோக்கன் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யும் முறையினை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

ரேஷன் கடைகள்:

ரேஷன் கடைகளில் எப்போதும் கூட்டம் முண்டியடிக்கும். நிவாரண நிதி வழங்கப்படுவதால் கூட்டம் ஒரே நேரத்தில் வரும் என்பதால் வீடு வீடாக சென்று ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் வழங்கினர்.

அதில் குறிப்பிட்டிருந்த தேதி, நேரத்தில் சென்று பொருள்களையும், நிவாரண நிதியையும் பெற்றுக் கொண்டனர். இதனால் கொரோனா பரவல் மையமாக ரேஷன் கடைகள் உருவாகாமல் தடுக்கப்பட்டது.

சேலம் மாவட்டம்:

சேலத்தில் ரேஷன் கடைகளில் 1000 அட்டைகளுக்கு மேல் உள்ள கடைகளில் மீண்டும் டோக்கன் முறையை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆயிரம் அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகளில் டோக்கன் முறையை பின்பற்ற அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு நேரடியாக சென்று உரிய பாதுகாப்புடன் அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்ய மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்த கொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!