ரேஷன் கடைகளிலும் தக்காளி, காய்கறிகள் விற்பனை!! அமைச்சர் அறிவிப்பு!!

காய்கறி விற்பனை:

ரேஷன் கடைகளில் தக்காளி, காய்கறிகள் விற்கப்படும் என அமைச்சர் ஐ பெரியசாமி அறிவித்துள்ளார். ஏற்கெனவே பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு ரூ 85- முதல் 100 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மழைக்காலம் என்பதால் வரத்து இல்லாத நிலையில் தமிழகம் உள்பட இந்தியாவில் பல்வேறு இடங்களில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. கிலோ ஒன்றுக்கு சில்லறை விலையில் ரூ 130 முதல் 150 வரையும் மொத்த விலையில் ரூ 100 முதல் ரூ 130 வரையும் விற்கப்படுகிறது.

இதற்கு தீர்வு காணும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் வெளி சந்தையை விட குறைவான விலையில் தக்காளி உட்பட பிற காய்கறிகள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வெளி சந்தையில் ஒரு கிலோ 150 ரூபாய் விற்பனை செய்யப்படும்.

ரேஷன் கடைகளில் தக்காளி  90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் வெளி சந்தைகளில் காய்கறி விலை கணிசமாக குறைந்து வருகிறது.

தக்காளி விலையை தொடர்ந்து, கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், பச்சை பட்டாணி, கேரட் போன்ற காய்கறிகளின் விலை 100 ரூபாய்க்கு மேல் அதிகரித்து விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்வரும் விவரப்படி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Vegetables in Ration Shop: ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை - அமைச்சர் அறிவிப்பு!

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!