ரே‌ஷன் கடைகளில் தக்காளியை விற்பனை செய்ய வேண்டும் – ராமதாஸ் கோரிக்கை!!

ராமதாஸ் கோரிக்கை:

தமிழ்நாட்டில் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகம், தெலுங்கானா, மகாராஷ்டிரா வரை இதே நிலை தான் என்பதால் சந்தைச் சமநிலை மூலம் காய்கறிகள் – தக்காளியின் விலையை கட்டுப்படுத்த முடியாது என்பதை அரசு உணர வேண்டும். எனவே ரே‌ஷன் கடைகளில் தக்காளியை விற்பனை செய்ய வேண்டும் என ராமதாஸ் கோரிக்கை கூறி உள்ளார்.

மானிய விலையில் அரசே தக்காளி மற்றும் காய்கறிகளை விற்பதன் மூலம் மக்களின் சுமையை குறைப்பது தான் இன்றைய தேவை ஆகும். அதைக் கருத்தில் கொண்டு தமிழ் நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் தக்காளி மற்றும் காய்கறிகளை மலிவு விலையில் விற்பனை செய்ய வேண்டும்.

கொரோனா காலத்தில் நடமாடும் காய்கறி கடைகள் உருவாக்கப்பட்டதைப் போல இப்போதும் உருவாக்கி மலிவு விலையில் காய்கறி மற்றும் தக்காளியை விற்பனை செய்யலாம். இவற்றை அரசு நேரடியாக உழவர்களிடம் இருந்து கொள்முதல் செய்தால் அவர்களுக்கும் நல்ல விலை கிடைக்கும். இதற்காக விலைக்கட்டுப்பாட்டு நிதியம் ஒன்றை தமிழக அரசு நிரந்தரமாக ஏற்படுத்த வேண்டும்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!