1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறையா!!

தமிழகத்தில் 1 -12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 25ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

விடுமுறை:

டிசம்பர் மாதத்தில் அரையாண்டு தேர்வு நடைபெறும். தேர்வு முடிந்தவுடன் ஒரு வாரத்திற்கும் மேல் விடுமுறை விடப்பட்டு புத்தாண்டு எல்லாம் முடிந்து ஜனவரி மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்பட்டதே தாமதம், மேலும் அரையாண்டு தேர்வுக்கு பதில் திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கடந்த மாதம் பருவ மழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு அவ்வப்போது விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் விடுமுறை இருக்காது என்று கூறப்பட்டு வந்தது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவிப்பு:

இந்த நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறை குறித்து அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து தமிழக பள்ளி மாணவர்களுக்கு இன்றுடன் திருப்புதல் தேர்வுகள் முடிவடையும் நிலையில் டிசம்பர் 25ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு தினசரி வகுப்புகள் தொடங்கவுள்ளது. அதனை தொடர்ந்து 6,7,8ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வும் தொடங்கவுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!