RTE இலவச மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!

RTE மாணவர் சேர்க்கை நாளை கடைசி நாள்:

விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் (ஆகஸ்ட் 3) நிறைவு பெறுகிறது.

தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25% இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் கல்வி பயில ராமநாதபுரம் மாவட்டத்தில் மீதமுள்ள இடங்களுக்கு ஆகஸ்ட் 3ம் தேதிக்குள் (நாளை) விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கட்டாய கல்வி உரிமை சட்டம்:

இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவர். இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் படிக்கலாம்.

இதுவரை 64 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

இணையதளம்:

rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.

துறை அதிகாரி:

சேர்க்கை தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் பள்ளிக்கல்வியின் இலவச உதவி மைய எண்ணை (14417) தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!