ரயில் பயனாளர்களுக்கு முன் பதிவு ரத்து செய்தால் வசூலிக்கப்படும் கட்டணம்!

ரத்து கட்டணம்

ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட்களை பயணிகள் முன்பதிவு செய்துவிட்டு ரத்து செய்தால் ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரத்து செய்ததற்கான கட்டணத்தை பயணிகள் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக பண்டிகை தினங்களில் கூடுதல் சலுகைகளுடன் சிறப்பு ரயில் சேவைகளும் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும், பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு திரும்ப நினைப்பவர்கள் அல்லது நீண்ட தூரம் பயணம் செய்ய விரும்புபவர்கள் முன்கூட்டியே ரயில் இருக்கைக்காக முன்பதிவு செய்துவிடுகின்றனர். ஆனால், கடைசி நேரத்தில் போக முடியாத சூழல் ஏற்பட்டுவிடுகிறது.

மேலும், பயணிகளுக்கு இருக்கை உறுதிசெய்யப்பட்ட பின்பு டிக்கெட்களை ரத்து செய்ய நேரிட்டால் இந்தியன் ரயில்வே அதற்கான ரத்து கட்டணத்தை வசூலிக்கிறது.

மேலும், நிதி அமைச்சகத்தின் வரி ஆராய்ச்சி பிரிவின் அடிப்படையில் வெளியான அறிக்கையின்படி ரயில் டிக்கெட் அல்லது ஹோட்டல்களில் முன்பதிவு செய்து அதனை ரத்து செய்துவிட்டால் ஜிஎஸ்டி தொகையுடன் சேர்த்து ரத்து கட்டணத்தை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரத்து கட்டணம் பயணிகள் எந்த வகுப்பில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்தாரோ அதற்கு ஏற்றார் போல மாறுபடும். அதாவது, முதல் வகுப்பு அல்லது குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் முன்பதிவு செய்திருந்தால் 5 சதவீத ஜிஎஸ்டியுடன் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாகவே ஏசி முதல் வகுப்பு அல்லது ஏசி எக்சிகியூட்டிவ் வகுப்பு டிக்கெட்களை ரத்து செய்தால் பயணிகளிடம் இருந்து ரூ.240 வசூல் செய்யப்படுகிறது. மேலும், ஏசி 2-அடுக்கு டிக்கெட்டுகளை 48 மணி நேரத்திற்கு முன்பு ரத்து செய்தால் ரூ. 200 மற்றும் ஏசி 3-அடுக்கு டிக்கெட்டுகளுக்கு ரூ.180ம் கட்டணமாக செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!