இலவசமாக பேருந்து பயணிக்கலாம்!! மாணவர்களுக்கு அரசு சிறப்பு அறிவிப்பு!!

தமிழக அரசு ஐடிஐ மாணவர்களும் இலவச பேருந்து பயணம் செய்ய அனுமதி!

அரசு தொழிற்பயிற்சி மாணவர்கள்:

தமிழகத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு பேருந்துகளில் இலவசமாக பயணிக்க சிறப்பு அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

அரசு வழங்கிய திட்டம்:

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதந் தோரும் ரூ.750 உதவித்தொகை மற்றும் விலையில்லா மடிக் கணிணி, மிதிவண்டி, பாடப் புத்தகம், காலணி, சீருடை, வரை படக் கருவிகள், இலவச பஸ் பாஸ் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

மாணவர்களுக்கு பஸ்பாஸ் வழங்கும் திட்டம்:

இந்நிலையில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக ஐடிஐ நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் ஜூன் 19 முதல் மீண்டும் நேரடி வகுப்புகள் தொங்கப்பட்டன. இதனால் மாணவர்கள் சென்னை மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் பஸ்பாஸ் அச்சிடும் பணிகள் கிடப்பில் இருந்தன. தற்போது, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு வருகிறது.

அரசின் இந்த அறிவிப்பால் அரசு தொழிற்பயிற்சி மாணவர்கள் பஸ்பாஸ் இல்லாமலும் தடையின்றி இலவசமாக பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு அறிவிப்பு:

மாணவர்களுக்கு புதிய அட்டை வழங்குவதில் ஏற்படும் கால தாமதம் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக பல மாணவர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்.