திங்கள் கிழமை பள்ளிக்கு வந்தால் செவ்வாய் விடுமுறை.. தமிழக அரசு அதிரடி..!!!!

அரசு தெரிவிப்பு:

தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று குறைந்துள்ளதால், கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

நவம்பர் 1 முதல் தொடக்கப்பள்ளிகள் திறப்பு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. அதில் காலை முதல் மாலை வரை வழக்கம்போல் முழுநேரமும் வகுப்புகள் நடைபெறும். திங்கட்கிழமை ஒரு வகுப்பிற்கு பாடம் நடத்தப்பட்டால் செவ்வாய்க்கிழமை அன்று விடுமுறை. மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்பது கட்டாயமில்லை. விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம். ஆன்லைன் வகுப்பு மூலமாகவும் மாணவர்கள் படிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!