UPSC சிவில் சர்வீஸ் முதல்நிலைத்தேர்வு ஒத்திவைப்பு… புதிய தேதிக்கு மாற்றம்!

UPSC சிவில் சர்வீஸ் முதல்நிலைத்தேர்வு:

UPSC யில் சிவில் சர்வீஸ் தேர்வு  ஜுன் 27 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக இந்த தேர்வானது தற்போது, ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சிவில் தேர்வு  தற்காலிமாக ஒத்திவைப்பு:

இந்தியா முழுவதும் அரசு பணியாளர் தேர்வுகள் துவங்கி பள்ளி தேர்வுகள் பல நுழைவுத்தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளும் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

UPSC சிவில் தேர்விற்கான புதிய தேதி அறிவிப்பு:

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது UPSC Civil Services Prelims exam – மை அக்டோபர் 10 ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளது.