தமிழ்நாடு அரசு அறிவிப்பு:
கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத் திட்டத்தில் திருத்தம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனா குறைந்து வருவதால் தளர்வுகள் அளிக்கப்படுகின்றன. தளர்வுகளை அறிவிப்பதே மீண்டும் தொற்றை அதிகரிக்க காரணமாக அமைந்துவிடக்கூடாது என்பதில் அரசு கவனமுடன் செயல்பட்டு வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து தொற்று பரவுவதை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், இன்னும் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர். போதிய விழிப்புணர்வும் இருந்தும் வேண்டுமென்றே தயக்கம் காட்டுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி அளிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!