சிறுவர்களுக்கான தடுப்பூசி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் கிடைக்கும் என சீரம் இன்ஸ்டியூட் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.
நேற்று இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி போடப்பட்டு வரலாறு சாதனை படைக்கப்பட்டது. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் கோவேக்சின், கோவிஷீல்டு போன்ற இரண்டு ஊசிகளை மட்டுமே போட்டு வருகின்றனர்.
இந்த தடுப்பூசி புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டியூட் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. நேற்று 100 கோடி தடுப்பூசி போடப்பட்டதை தொடர்ந்து சீரம் இன்ஸ்டியூட் நிறுவனத்தலைவர் ஆதர் புன வல்லா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது: “சீரம் இன்ஸ்டியூட்டில் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தை தயாரித்து வருகிறோம். தற்போது மாதத்திற்கு 22 கோடி என்ற அளவில் மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. அடுத்த ஆண்டு இந்த உற்பத்தி 24 கோடியாக உயர்த்த வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை இலக்காகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருவதால் அதற்கு ஏற்றார் போல் நாங்களும் மருந்துகளை தயாரித்து வழங்கி வருகிறோம்.