தமிழகத்தில் இன்று முதல் வீதிகளில் காய்கறிகள் விற்பனை ஆரம்பம்!!

தமிழகத்தில் இன்று முதல் வீதிகளில் காய்கறிகள் விற்பனை ஆரம்பம்:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் ஏற்கனவே மே 10 முதல் 24 வரை அமலில் உள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதன் படி இன்று முதல் 1 வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதனால் வீதிகளில் நேரடியாக சென்று காய்கறிகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் மொத்த காய்கறிகளின் எண்ணிக்கை 18 ஆயிரம் மெட்ரிக் டன் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதனை விற்பனை செய்ய சென்னை மாநகராட்சியில் மட்டும் 4,380 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் தினந்தோறும் 1,160 மெட்ரிக் டன் அளவிற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மற்ற 2,770 வாகனங்கள் காய்கறிகளை விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சித்துறை மற்றும் கூட்டுறவுத்துறையுடன் இணைந்து உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக இந்த பணிகள் அனைத்தும் செய்யப்படும் எனவும் காய்கறிகள், பழங்கள் அனைத்தும் விவசாயிகளிடம் நேரடியாக சென்று கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.