செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் முறையிலேயே நடத்த அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை!!

தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை:

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதனால் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வுகள் நடத்தப்பட்டன.

தற்போது கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு மாணவர்களுக்கு நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் ஜனவரி 20 முதல் நேரடி முறையில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

இதற்கு மாணவர்கள் மற்றும் பல அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து, ஆன்லைன் முறையில் தேர்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் கல்லூரிகளில் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையிலேயே நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேரடி தேர்வு நடத்த இரண்டு மாதங்கள் கால அவகாசம் வழங்கினாலும் அதற்குள் மாணவர்கள் தயாராவார்காளா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே மாணவர்களுக்கு நடப்பு ஆண்டில் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வேண்டும் என்று விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!