அரையாண்டு தேர்வு விடுமுறை பாதியாக குறைக்கப்பட்டதா?

பள்ளிக் கல்வித்துறை தெரிவிப்பு:

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு 5 நாட்கள் மட்டுமே அரையாண்டு விடுமுறை என்ற அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அரையாண்டு விடுமுறை வழங்கப்படுமா என்ற ஆர்வம் மாணவர்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும் பரவலாக எழுந்தது. ஏற்கனவே விடுமுறைக்கு மேல் விடுமுறை வழங்கப்பட்டதால் அரையாண்டு விடுமுறை ரத்தாகும் என தகவல்கள் பரவின. இந்நிலையில் நேற்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, அரையாண்டு விடுமுறை குறித்த தகவலை பகிர்ந்தார்.

ஆனால் டிசம்பர் 25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்கள் கிறிஸ்துமஸ் மற்றும் சனி ஞாயிறு விடுமுறை என்பதும் அதேபோல் ஜனவரி 1 மற்றும் 2 ஆகிய இரண்டு நாட்கள் புத்தாண்டு மற்றும் சனி ஞாயிறு விடுமுறை என்பதாலும் டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 வரை விடுமுறை என்பது உறுதியாகி உள்ளது என்பதும் எனவே அரையாண்டு தேர்வு விடுமுறை மொத்தம் ஒன்பது நாட்கள் என்பதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்றும் ஆசிரியர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!