CBSE துணைத்தேர்வு மதிப்பெண் முடிவுககளை அறிந்து கொள்ளும் வழிமுறைகள்!!!

CBSE தேர்வு முடிவுகள்:

கல்வி வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடைத்தாள்களைச் சரிபார்க்கும் செயல்முறை முடிந்துவிட்டதாகவும், முடிவின் இறுதி கணக்கீடு நடந்து கொண்டிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் முடிவுகளை முன்னுரிமை அடிப்படையில் அறிவிப்பதாக வாரியம் தெரிவித்துள்ளது. இதனால், மாணவர்களின் காத்திருப்பு இன்னும் அதிகமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் முறை:

  • முதலில், CBSE- யின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbseresults.nic.in அல்லது cbse.gov.in ல் செல்ல வேண்டும்.
  • தனித்தேர்வர்கள் பிரிவிற்கு செல்ல வேண்டும்.
  • Improvement exam Result link 2021 என்ற இணைப்பை தேர்வு செய்ய வேண்டும்.
  • login பகுதியில் உங்களது விவரங்களை உள்ளிட வேண்டும்.
  • இப்பொழுது உங்கள் தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!